அதிமுக_வுக்கு தில் இல்லை என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் 3 ஆம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான திமுகவின் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்ததால் திமுக எம்எல்ஏக்கள் அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கூறுகையில் ,
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளது போல், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், அத்தகைய தீர்மானத்தை இயற்ற இந்த அரசு அஞ்சுகிறது. மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் கொண்டு வர அதிமுகவிற்கு தில் இருக்க வேண்டும். அத்தகைய தில் இவர்களுக்கு இல்லை. பிகார், ஆந்திரா, கேரளா போன்ற மாநில முதலமைச்சர்களுக்கு இருக்கும் தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று தெரிவித்தார்.