சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை விரிவடைந்து கொண்டே வருகிறது. இதனை அடுத்து முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஆட்டோமொபைல் மின்சார ஸ்கூட்டர், பைக், கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகரித்துவரும் பெட்ரோல், டீசலின் விலை மின்சார வாகனங்களின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்திருந்தாலும், நீண்ட தூரம் பயணம் செய்ய வாடிக்கையாளர்கள் இன்னும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் மின்சார பேட்டரி ஸ்கூட்டர் களுக்கு கூடுதல் பேட்டரி பேக்குகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 300 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. பெரும் பாலான மின்சார கூட்டங்களில் பேட்டரி நீக்கம் செய்யப்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்பிள் எனர்ஜி பேட்டரி அவற்றை கழற்றி மாட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மின்சார ஸ்கூட்டர் 8.5kW மோட்டர் உடன் வருகிறது.
இதனால் 72 Nm டார்கெட் உறுதி செய்ய முடியும். மேலும் இதில் பாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் 30 லிட்டர் பூட் ஸ்பேஸ் on-board நேவிகேஷன் போன் செயலி அழைப்பு மற்றும் இசை கட்டுப்படுத்தும் அமைப்பு போன்றவை இடம்பெறுகின்றன. இந்த பைக்கில் எக்ஸ்ஷோரூம் விலை ரூபாய் 1.09 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் கூடுதல் பேட்டரி உடன் வழங்கப்பட்டுள்ள. இந்த ஸ்கூட்டரின் விலை1.45 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் ரூபாய் 1,947 செலுத்தி இதற்கான முன்பதிவு செய்து கொள்ளலாம் ஜூன் மாதம் முதல் இந்த பைக்குகள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.