கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. இந்த வேன் நெல்லிக்குப்பத்தில் சென்று கொண்டிருக்கும்போது ஓட்டுநருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் வேன் தாறுமாறாக ஓடி அங்கிருந்த வீட்டு சுவரின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி பள்ளி மாணவர்கள் உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.