சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள கிழக்கு தவிட்டுப்பாளையம் பகுதியில் ஜானகிராமன் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவருக்கு கலைமகள்(31) என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் உயிரிழந்த ஜானகிராமனுக்கு சாமி கும்பிட்டு விட்டு திதி கொடுப்பதற்காக கலைமகள் தனது உறவினருடன் மேற்கு தவிட்டுப்பாளையம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கலைமகளின் உறவினர்களான சஸ்மிதா, ஹேம தர்ஷினி ஆகிய இரு பெண்களிடம் அதே பகுதியில் வசிக்கும் இளவரசன்(31), அறிவழகன்(25)ஆகியயோர் தகராறு செய்து கையை பிடித்து இழுத்தனர்.
இதனை தட்டிக்கேட்ட சுரேஷ் என்பவரை வாலிபர்கள் தாக்கியுள்ளனர். மேலும் அந்த வாலிபர்கள் பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து கலைமகள் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தபுகாரின் பேரில்வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளவரசன், அறிவழகன் ஆகிய இரண்டு நபர்களையும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விட்ட்னர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.