உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு சென்ற இந்திய மாணவர்களை ரயில்களில் பயணிக்க அனுமதிக்கவில்லை என்று புகார் எழுந்திருக்கிறது.
உக்ரைன் நாட்டின் கார்க்கிவ் பகுதியில் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்களில் இந்திய மக்களை அந்நாட்டின் காவல்துறையினர் ஏற விடுவதில்லை என்று மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்திய மாணவர்கள் எல்லை பகுதிகளுக்கு செல்வதற்கு ரயில் நிலையம் சென்றுள்ளனர். ஆனால், அவர்களை ரயில்களில் பயணிக்க விடாமல் காவல்துறையினர் தடுக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
உக்ரைன் அரசு நாங்கள் இன மற்றும் நிறப் பாகுபாடுகள் பார்ப்பதில்லை என்று விளக்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கார்க்கிவ் ரயில் நிலையத்தில் இந்தியாவைச் சேர்ந்த 1000 மாணவர்கள் காத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.