சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் கிராமத்தில் சீலைக்காரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு நேற்று சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தை சேர்ந்த முத்து என்பவர் தனது மகன் பெருமாளுடன் சாமியை தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் அருகே உள்ள குளத்திற்கு கை கழுவுவதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி பெருமாள் குளத்திற்குள் தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக முத்துவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பெருமாளை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து முத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.