Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாசி மாத அமாவாசை…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்….!!

அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்க திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம்தோறும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்நிலையில் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பால், பழம், திருநீர், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட 18 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை  தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |