Categories
விளையாட்டு

துப்பாக்கி சுடுதல் போட்டியில் …. ரஷ்ய வீரர்களுக்கு தடை …. அதிரடி அறிவிப்பு ….!!!

உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்திருக்கும் ரஷியா மற்றும் அதற்கு ஆதரவாக உள்ள  பெலாரஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என்று அனைத்து விளையாட்டு சம்மேளனங்களுக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை சேர்ந்த வீரர்கள் மறு அறிவிப்பு வரும் வரை பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் நேற்று அறிவித்ததுள்ளது.
இதனிடையே உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்து நாட்டில் கெய்ரோவில்  நடைபெற்று வருகிறது .இதனால் இப்போட்டியில் ரஷ்யா வீரர்கள் தொடர்ந்து பங்கேற்க முடியாது என தெரிகிறது. இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டில் ரஷ்ய அதிபர் புதினுக்கு வழங்கப்பட்ட 9-வது டான் கவுரவ கருப்பு பட்டையை திரும்ப பெற முடிவு செய்திருப்பதாக உலக தேக்வாண்டோ சம்மேளனம் தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |