Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டி20 தொடர்: தரவரிசையில் ஸ்ரேயாஸ் முன்னேற்றம் …. விராட் கோலி சறுக்கல் …!!!

டி20 தொடருக்கான வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது.இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 27 இடங்களுக்கு முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார். அதேசமயம் சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகளிலும் ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்து அசத்தியதால் தரவரிசையில் அவர் முன்னேறியுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 5 இடங்கள் சரிந்து 15-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.இதேபோல் இந்திய அணியில் கே.எல்.ராகுல் 10-வது இடத்திற்கு  பின்தங்கியுள்ளார்.இதையடுத்து ரோகித் சர்மா 13-வது இடத்திலும்,பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும் உள்ளனர். இதைதொடர்ந்து பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் புவனேஷ்குமார் 3 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தில் உள்ளார்.

Categories

Tech |