Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுகிறார் பவன் ஜலாட்!

நிர்பயா குற்றவாளிகள் இன்னும் சில நாள்களில் தூக்கில் போடப்பட உள்ளனர். இவர்களுக்கு தூக்கு தண்டனையை பவன் ஜலாட் என்பவர் நிறைவேற்றவுள்ளார்.

நிர்பயா வழக்கில் தூக்கு கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும்வகையில் பவன் ஜலாட், குற்றவாளிகளைத் தூக்கில்போட வேண்டும் என திகார் சிறை நிர்வாகம் விரும்புகிறது. இதுதொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் அவர் பணிபுரியும் சிறைக்கு, திகார் நிர்வாகம் ரகசிய கடிதமும் எழுதி உள்ளது.

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற பவன் ஜலாட் தேவை என திகார் சிறை நிர்வாகம் விரும்ப சில சிறப்பு காரணங்களும் உள்ளன. அதில்,

ஒன்று – பவன் ஜலாட் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் சமூகத்தைச் சேர்ந்தவர், அனுபவமிக்கவர்.

இரண்டு – சரியான பார்வைத்திறனும் திடகாத்திரமான உடல்வாகும் கொண்டவர்.

தற்போது பவன் மீரட்டில் உள்ளார். மீரட்டுக்கும் டெல்லிக்கும் இடையே அதிக தூரமில்லை. அதனால், பவன் சரியான நேரத்தில் டெல்லிக்கு வந்து சேர்ந்துவிடுவார். பவனை டெல்லி திகார் சிறைக்கு அழைத்துவரும் நிகழ்வுகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, திகார் சிறை காவல் உயர் அலுவலர் சந்தீப் கோயல் புதன்கிழமை கூறும்போது, “டெல்லி நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் அவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரும் வருகிற 22ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கில் போடப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |