லைக்கா புரொடக்ஷன் தயாரிக்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘தர்பார்’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டை மேள தாளத்துடன் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதையடுத்து ‘தர்பார்’ படத்தை இணையதளங்களில் வெளியிட தடைக்கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், ‘தர்பார்’ திரைப்படத்தை வெளியிட ஆயிரத்து 370 இணையதளங்களுக்கு தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார்.