Categories
உலக செய்திகள்

அட கடவுளே….! “இவர் தனியா பேசிட்டு இருந்தாரா?”…. ஐ.நா சபையில் நடந்த சம்பவம்….!!

ஐ.நா சபையில் ரஷ்ய வெளியுறவுத் துறை மந்திரி பேசத் தொடங்கியதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் வெளியேறி உள்ளனர்.

ரஷ்யா உக்ரைன் மீது எட்டாவது நாளாக முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் ரஷ்ய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் இந்த மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உலக நாடுகள் ரஷ்யாவின் பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் தொடர்பை துண்டித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு கூட்டம் ஐ.நா சபையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் ரஷ்ய வெளியுறவுத் துறை மந்திரி செர்கெ லவ்ரொவ் பங்கேற்றார். இதற்கிடையில் முன்னதாகவே அவர் பேசி பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று ஐ.நா சபையில் ஒளிபரப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து ரஷ்ய மந்திரி பேசிய அந்த வீடியோ ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் போதே  கூட்டத்தில் பங்கேற்றிருந்த பல்வேறு நாடுகளின் 100க்கும் மேற்பட்ட தூதர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர். இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவு மந்திரி பேசிய அந்த வீடியோவை காண யாரும் இல்லாமல் தனியாக ஓடிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |