Categories
உலக செய்திகள்

“மாயமான போர் விமானம்”….!! பரபரப்பில் பிரபல நாடு….!!

மிக்-21 லான்சர் போர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. 

ருமேனியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் மிக்-21 லான்சர் என்ற போர் விமானம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்த விமானம் டோபிரோகியா பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில் இருந்து விலகியது. இதனைத் தொடர்ந்து ரேடாரில் இருந்து போர் விமானம் மறைந்துள்ளதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில் ஐ.ஏ.ஆர் 330- புமா ஹெலிகாப்டர் மாயமான போர் விமானத்தை தேட அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த ஹெலிகாப்டர் விமானப்படை இடத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில்  சென்று கொண்டிருந்த போது திடீரென விபத்துக்கு உள்ளானது.

இதனைத் தொடர்ந்து இந்த விபத்தில் ருமேனிய கடற்படையைச் சேர்ந்த 2 வீரர்கள் மற்றும் 5 குழு உறுப்பினர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இந்த விபத்து குறித்து விசாரிக்க இரண்டு விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காணாமல் போன மிக்-21 போர் விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |