சுமார் 3 டன் எடை கொண்ட விண்வெளி குப்பை நிலவின் மீது மோத போவதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள், செயற்கைக்கோள்கள் காலாவதியான பின்பு விண்வெளியில் குப்பைகளாக மாறி அங்கேயே சுற்றிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் இப்படி சுற்றிக் கொண்டிருக்கும் இந்த குப்பைகள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் எதிர்கால விண்வெளி முயற்சிகளையும் இது மிகவும் கடினமாகும் என்று விஞ்ஞானிகள் கவலையாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் சுமார் 3 டன் எடை கொண்ட விண்வெளி குப்பை நிலவின் மீது மோத போவதாக நாசா நிறுவனம் தெரிவித்தது. இந்த நிலையில் முதலில் நாசா நிறுவனம் கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் அனுப்பப்பட்ட பால்கன் 9 ராக்கெட்டின் மேல் பகுதியான ‘பூஸ்டர்’ தான் நிலாவின் மீது மோத போவதாக தெரிவித்திருந்தது. அதற்குப் பின்னர் அந்த ராக்கெட் ஸ்பேஸ் எக்ஸ் உடையது இல்லை என்றும் 2014ஆம் ஆண்டு சீன விண்வெளி ஆய்வு மையத்தால் அனுப்பப்பட்ட ராக்கெட்டின் ‘பூஸ்டர்’ என்று நாசா தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து சீனாவும் அந்த ராக்கெட் எங்களுடையது கிடையாது என தெரிவித்தது. இந்த நிலையில் குழப்பத்தின் மத்தியில் 3 டன் எடை கொண்ட அந்தக் குப்பை மணிக்கு 9300 கிலோ மீட்டர் வேகத்தில் வெள்ளிக்கிழமை அன்று நிலாவின் மீது மோத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த விண்வெளி குப்பைகள் விண்வெளியில் உள்ள தொலைநோக்கிகளின் பார்வையில் இருந்து விலகி நிலாவின் பின்புறத்தில் மோத உள்ளது. இதனால் செயற்கை கோள்கள் மூலம் நிலவின் பாதிக்கப்பட்ட இடங்களை உறுதி செய்வதற்கு வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம் என்றும் வின்வெளி குப்பைகள் நிலாவில் மோதுவது இது முதல்முறை அல்ல என்பதால் இதனால் பெரிய அளவில் விளைவுகள் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதே சமயம் வின்வெளி குப்பை மோதுவதால் நிலாவில் 33 அடி முதல் 66 அடி வரையில் பெரிய பல்லம் ஏற்படலாம். மேலும் நிலாவில் இருந்து நூற்றுக்கணக்கான கி.மீ தொலைவுக்கு தூசி பரவும் எனவும் தெரிவித்துள்ளனர்.