Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

” உணவின்றி தவிக்கும் மகன் ” கண்ணீர் மல்க பெற்றோர்…. கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

உணவு இல்லாமல் தவித்து வரும் தன் மகனை மீட்டுத் தருமாறு பெற்றோர் மாவட்ட ஆட்சியருக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்.புதூர் பகுதியில் இளம்வழுதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார் என்ற மகன் இருக்கிறார். இவர் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைனுக்கு சென்றுள்ளார். தற்போது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. இதனால் உணவு கூட கிடைக்காமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உதயகுமாரின் பெற்றோர்  மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் தன மகன் மற்றும் அவருடன் இருக்கும் சக மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் ஏறி எல்லை பகுதிக்கு செல்ல முயற்சி செய்துள்ளதாகவும், ஆனால் உக்ரைன்  மாணவர்கள் தமிழக மாணவர்களை  ரயிலில் ஏற விடாமல் கீழே தள்ளி விடுவதாகவும் தெரிவித்துள்ளார். தன் மகனுடன் சேர்த்து மொத்தம் 25 மாணவர்கள் அவருடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 5 நாட்களாக தன் மகன் உணவின்றி தவித்து வருவதாகவும,  தன்  மகனை விரைந்து மீட்டு தாருங்கள் எனவும் எழுதி கண்ணீர் மல்க மனுவை கொடுத்துள்ளனர். இந்த மனுவை பார்த்த ஆட்சியர் உங்கள் மகனை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |