12-வது ஐசிசி மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நாளை நடைபெற உள்ளது.இப்போட்டி மார்ச் 4-ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இத்தொடரில் இங்கிலாந்து, இந்தியா ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கின்றன.ரவுண்ட் ராபின் லீக் மற்றும் நாக் அவுட் சுற்று முறையில் இப்போட்டி நடைபெறுகிறது.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.மேலும் வருகிற 28-ம் தேதியுடன் லீக் சுற்று போட்டிகள் முடிகிறது.இதையடுத்து அரையிறுதி போட்டி 30 மற்றும் 31- தேதியும், இறுதிப்போட்டி ஏப்ரல் 3-ம் தேதியும் நடைபெறுகிறது.
இந்நிலையில் நாளை தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
மேலும் இந்திய மகளிர் அணி 10-வது முறையாக உலக கோப்பை போட்டியில் விளையாடுகிறது.
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 6-ம் தேதி மோத உள்ளது. குறிப்பாக இந்தியா மோதும் அனைத்து போட்டிகளும் காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.