நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றுள்ளனர். இதில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 90% இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய இடங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு மாநகராட்சி துணை மேயர், 2 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத்தலைவர், 3 பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணை தலைவர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.
மாநகராட்சி துணை மேயர்
1.கடலூர் – கடலூர் மாவட்டம்
நகராட்சி தலைவர்
1.ஜெயங்கொண்டம் – அரியலூர் மாவட்டம்
2.நெல்லிக்குப்பம் – கடலூர் மாவட்டம்
நகராட்சி துணைத் தலைவர்
1.திண்டிவனம்- விழுப்புரம் மாவட்டம்
2.பெரியகுளம் – தேனி மாவட்டம்
3.இராணிப்பேட்டை – இராணிப்பேட்டை மாவட்டம்
பேரூராட்சித் தலைவர்
1.பெண்ணாடம் – கடலூர் மாவட்டம்
2.காடையாம்பட்டி – சேலம் மாவட்டம்
3.பொ.மல்லாபுரம் – தருமபுரி மாவட்டம்
பேரூராட்சி துணைத் தலைவர்
1.கடத்தூர் – தருமபுரி மாவட்டம்
2.திருப்போரூர் – செங்கல்பட்டு மாவட்டம்
3.புவனகிரி – கடலூர் மாவட்டம்
4.கொளத்தூர் – சேலம் மாவட்டம்
5.வேப்பத்தூர் – தஞ்சாவூர் மாவட்டம்
6.அனுமந்தன்பட்டி – தேனி மாவட்டம்
7.ஓவேலி – நீலகிரி மாவட்டம்