கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 8-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா இடையேயான மோதலில் இதுவரை 9,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் நடத்திய பதில் தாக்குதலில் இதுவரை ரஷ்யாவின் 30 போர் விமானங்கள், 31 ஹெலிகாப்டர்கள், 217 பீரங்கி வாகனங்கள், 374 ராணுவ வாகனங்கள், 42 ராக்கெட் ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளது.