கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சம்பள உயர்வு 9 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என ஆய்வின் மூலம் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவலின் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலருக்கு வேலை இல்லாமல் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டன. மேலும் சிலருக்கு வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் பணி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் ஊக்கத்தொகை போன்ற சலுகைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது இயல்பு நிலை திரும்பியதால், நிறுவனங்கள் மீண்டும் இந்த சலுகைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
மேலும் இது தொடர்பான ஆய்வுகள் நடத்தி அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் டெலாய்ட் நிறுவனம் ஊதிய உயர்வு தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, 2022 ஆம் ஆண்டில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வானது 9.1 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டுகள் வரை 8 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே இருந்த நிலையில், இந்த ஆண்டில் இந்த ஊதி உயர்வானது உயர்த்தப்பட்டது, ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஆய்வுக்கு 450 நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அதில் சுமார் 34 சதவீத நிறுவனங்கள் இரட்டை இலக்க சம்பள உயர்வை வழங்குவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு துறைவாரியாக பார்த்தால் வாழ்க்கை அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் தான் ஊதிய உயர்வு அதிகமாக இருக்கும் என இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.