Categories
உலக செய்திகள்

‘டெஸ்ட் டு ட்ரீட்’…. அமெரிக்க அதிபரின் புதிய முயற்சி….!!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ‘டெஸ்ட் டு ட்ரீட்’   என்னும் புதிய முயற்சியை அமைச்சர் ஜோ பைடன் தொடங்கியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா  வைரஸை கட்டுப்படுத்துவதற்காக`டெஸ்ட் டு ட்ரீட்’   என்னும் பெயரில் புதிய முயற்சியை அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் கையில் எடுத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது இதுகுறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதன்படி அமெரிக்க மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள மருந்தங்களிலேயே கொரோனா  பரிசோதனை செய்து கொள்வதற்கு தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தித்தந்துள்ளது.

ஒருவேளை அந்த பரிசோதனையின் கொரோனா  உறுதியானால் அவர்களுக்கு இலவசமாக கொரோனாவுக்கான  ஆன்டி-வைரஸ் மாத்திரைகளை அளிப்பதற்கான ஏற்பாடுகளையும் வசதிகளையும் அரசு செய்துள்ளது. இதன் மூலமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 90 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே வேளையில் புதிய வகை கொரோனா வைரஸுக்கு மக்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் ஜோ பைடன் அறிவுறுத்தி உள்ளார்.

Categories

Tech |