தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவோர் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிகளில் நியமிக்கப்பட மீண்டும் ஒரு போட்டித்தேர்வு எழுத வேண்டும் என்ற சமூகநீதிக்கு எதிரான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் சென்னை பள்ளிக் கல்வி இயக்குனர் வளாகத்தில் போரட்டம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் போராட்டம் நடத்த அவர்கள் முயற்சி செய்தனர். இதன் காரணமாக டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த பட்டதாரிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.