உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கவுன்சிலராக பதவியேற்றுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகள் என மொத்தம் 210 இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க-1, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-1, விடுதலை சிறுத்தைகள் கட்சி-2, காங்கிரஸ்-5, பா.ம.க-6, அ.தி.மு.க-33, தி.மு.க-130 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர்களுக்கு நேற்று பதவி ஏற்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த பதவி ஏற்பு விழா அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெற்றுள்ளது. இந்த பதவி ஏற்பு விழா மாவட்ட ஆட்சியர் மற்றும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.