Categories
மாநில செய்திகள்

#justin: மதிமுக வேட்பாளர்கள்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 04/03/2022 நாளை நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு ஆவடி துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு மதிமுகவை சேர்ந்த எஸ்.சூரியகுமார் போட்டியிடுகிறார். மாங்காடு நகராட்சி தலைவர் பதவிக்கு மதிமுகவை சேர்ந்த சுமதி முருகன், திருவேங்கடம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு த.பாலமுருகன், ஆடுதுறை பேரூராட்சி தலைவர் பதவிக்கு இரா. சரவணன், சென்னசமுத்திரம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு கு.பத்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர்..

Categories

Tech |