Categories
அரசியல் மாநில செய்திகள்

’சசிகலாவை தர்பார் படத்தில் விமர்சித்தது சரிதான்’ – அமைச்சர் ஜெயக்குமார்.!

சசிகலா தொடர்பாக தர்பார் திரைப்படத்தில் விமர்சித்து காட்சிகள் வைத்தது வரவேற்கக்கூடியதுதான் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ராயபுரத்தில் நியாயவிலைக் கடைகளில் இன்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “பொங்கல் பரிசுத்தொகுப்பு நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து, காலை ஒன்பது மணிமுதல் இரவு ஏழு மணிவரை வழங்கப்படும். ஒரு கடையில் 300 பேர் வீதம் தினசரி வழங்கப்படுகிறது.

பணம் பாதாளம்வரை பாயும் என்பார்கள். ஆனால், பணம் சிறைச்சாலைவரை பாய்ந்திருக்கிறது. தர்பார் படத்தில் வரும் ஒரு காட்சி, சசிகலாவை பற்றிய கருத்தாக இருக்கும் என எண்ணுகிறேன். இது நல்ல கருத்துதான். பணமிருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் திரைப்படம் வாயிலாக இதுமாதிரியான கருத்துகள் வருவது வரவேற்கக்கூடியதுதான்.

தர்பார் படத்தையும், பிகில் படத்தையும் நாங்கள் ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறோம். எங்களுக்கு எந்த வேறுபாடும் கிடையாது. அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்புக் காட்சி திரையிடலுக்கான அனுமதியை அலுவலர்கள் வழங்குகின்றனர்“ என்றார்.

Categories

Tech |