Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

” சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் ” அ.தி.மு.க.வில் இணைய போகிறார்களா…? அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!

அ.தி.மு.க கட்சியில் சசிகலா மீண்டும் இணைக்கப்பட்டதாக கூறியுள்ளதால்  கட்சி தொண்டர்களிடம்  பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க நிர்வாக கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த நிர்வாக கூட்டத்தின் போது சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் மீண்டும் கட்சியில் இணைக்கபடுவதாக அறிக்கை விடுத்துள்ளனர். இதனால் அ.தி.மு.க தொண்டர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில்  அ.தி.மு.க செயலாளர் அருள்மொழித்தேவன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இவர் டி.டி.வி தினகரன் மற்றும் சசிகலாவை ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் குழுவினர் கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரையும் மீண்டும் கட்சியில் சேர்ப்பது குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும் என கூறியுள்ளார். இவர்கள் 2 பேரும் கட்சியில் இணைவது  90% அ.தி.மு.க தொண்டர்களுக்கு உடன்பாடு இல்லை என்பதே உண்மை எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்திருந்தாலும் வருகிற நாட்களில் கட்டாயம் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |