Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி திருவிழா…. வெற்றி பெற்ற உரிமையாளர்களுக்கு பரிசுகள்….!!

மகாசிவராத்திரியை  முன்னிட்டு மாட்டுவண்டிபந்தயம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆலத்துப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டு பந்தயம் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு அலத்துப்பட்டி- குன்றக்குடி சாலையில் 58-வது ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டி பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவுகளாக நடைபெற்றது.

இதில் பெரிய வண்டி பந்தயத்தில் கலந்து கொண்ட  10 வண்டிகளில் நெல்லை மாவட்டம் வேளாங்கண்ணி வண்டி முதல் பரிசையும் , 2-வது பரிசை புதுப்பட்டி கௌசல்யா வண்டியும், 3-வது பரிசை பூந்தோட்டம் லத்திகா மற்றும் இரத்தின கோட்டை கௌசல்யா வண்டியும், 4-வது பரிசை சிங்கவனம் ஜமீன் ராஜா வண்டியும் பெற்றுள்ளது. மேலும் சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் கலந்துகொண்ட 26 வண்டிகளில் புளிமலைபட்டி முனுசாமி வண்டி 1-வது பரிசையும், 2-வது பரிசை வெளிமுத்தி வாகினி  பைனான்ஸ் வண்டியும், 3-வது பரிசை காரைக்குடி சிவா வண்டியும், 4-வது பரிசை வைரிவயல் வீரமுனை ஆடவர் வண்டியும் தட்டிச்சென்றது.

இதனையடுத்து நடைபெற்ற 2-வது சுற்றில் முதல் பரிசு திருப்பந்துருத்தி ஆனந்த ஐயனார் வண்டியும், 3-வது பரிசை சிங்கம்புணரி யாஷிகா வண்டியும், 4-வது பரிசை பேச்சியப்பன் என்பவர் வண்டியும் வென்றுள்ளது. இதனையடுத்து  வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |