பெண் காவல் ஆய்வாளரின் பாலியல் தொல்லை வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை வந்துள்ளது. இதுகுறித்து இவர் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் 6 நாட்கள் விசாரணை நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து 7-ஆம் நாள் விசாரணையில் பெண் காவல் ஆய்வாளர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் எதிர்க்கட்சி வழக்கறிஞர் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் எனகூறி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.