தமிழகத்தில் அரசு, நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருடந்தோரும் தேசிய திறனாய்வு தேர்வு நடைபெறுகின்றன. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1,250 வீதம் 11 மற்றும் 12-ம் வகுப்பு வரையிலும், இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு வரையிலும் ரூ.2000 வீதம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2021-2022 ஆம் வருடத்துக்கான தேசிய திறனாய்வு தேர்வு பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன்படி தேர்வுகள் நடத்தப்பட்டது. இத்தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல் இத்தேர்வுகள் இரு முறையாக நடைபெற்றது. மத்திய அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் தேசிய திறனாய்வு தேர்வு நடைபெற்று வருகிறது. அதன் வாயிலாக மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகையானது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 4 வருடங்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். இந்நிலையில் இத்தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதாவது www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் இந்த இறுதி விடைக்குறிப்பை பார்த்து பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.