Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“அவ என் மனைவியை அடிக்கடி திட்டிட்டே இருப்பா”…. வாலிபர்களின் கூட்டு செயலால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

நண்பனின் மனைவியை கூட்டு பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ எடுத்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அடுத்த கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த இளம்பெண் ஆரணியில் உள்ள வாட்டர் கம்பெனியில் வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அந்த இளம்பெண் இலுப்பகுணம் கிராமத்தில் வசிக்கும் டிரைவர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இதற்கிடையே டிரைவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

இதனை தொடர்ந்து டிரைவர் அவரது குடும்பத்தை விட்டு பிரிந்து தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு பழக்கம் ஏற்பட்ட இளம்பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக அவர்கள் ஆரணியில் தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கணவன் மனைவியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் டிரைவர் நண்பரான விழுப்புரம் பகுதியில் வசிக்கும் கோகுல்ராஜ், பெங்களூரில் காதலித்து வந்த பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இதனால் கோகுல்ராஜ் வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால் டிரைவரிடம் வீடு ஒன்றை வாடகைக்கு தரும்படி கேட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து டிரைவர் தனது வீட்டின் அருகில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொடுத்துள்ளார். அங்கு கோகுல்ராஜ் காதல் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் டிரைவர் வேலை நிமித்தமாக சென்ற போது இளம்பெண் மட்டும் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த கோகுல்ராஜ் அவருடைய நண்பரான டிரைவர் ஜெயசூர்யா என்பவரை தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இதனையடுத்து இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு டிரைவர் வீட்டிற்கு சென்றனர். அந்த நேரத்தில் வீட்டிலிருந்த இளம்பெண் அவர் வெளியே சென்றுள்ளார் என கூறியுள்ளார்.

தனது கணவரின் நண்பர்கள் என்பதால் அவர்களை அந்த இளம்பெண் வீட்டிற்குள் அழைத்து பேசியுள்ளார். அப்போது கோகுல்ராஜூம், ஜெயசூர்யாவும் திடீரென வீட்டை உள்பக்கமாக பூட்டி உள்ளனர். இதனையடுத்து வீட்டிலிருந்த குழந்தைகளை பக்கத்து அறையில் சத்தம் போடாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன குழந்தைகள் அமைதியாக இருந்துள்ளனர். இதனையடுத்து இளம்பெண்ணை படுக்கை அறைக்கு தூக்கி சென்று கை கால்களை கட்டி இருவரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் பலாத்காரம் செய்ததை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

அதன்பின் கட்டுகளை அவிழ்த்து விட்டு வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று இளம்பெண்ணை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இளம்பெண் ஆரணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோகுல்ராஜ், ஜெயசூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் கோகுல்ராஜ் எனது மனைவியை அந்த இளம்பெண் அடிக்கடி திட்டி வந்துள்ளார். இதனால் அவளை பழிவாங்குவதற்காக நண்பரின் மனைவி என்றும் பார்க்காமல் பலாத்காரம் செய்தேன் என விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |