Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி பத்திரப் பதிவுத்துறையில்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு அரசு ஆவணங்கள் பதிவு செய்தல், அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள், நிறுவனங்கள், சீட்டு நிதி நிறுவனங்கள், பிறப்பு, இறப்பு பதிவு செய்தல் ஆகிய பணிகளை செய்திட பதிவுத்துறை மூலம் மாநிலம் முழுவதும் பதிவு அலுவலகங்கள் அமைத்துள்ளது. தமிழக அரசு பதிவுத் துறை அலுவலகங்கள் மண்டல அலுவலகங்கள், மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள், சார்பதிவாளர் அலுவலகங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதி மாதம் மார்ச் என்பதால் அடுத்த 2022- 2023ம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப் பதிவுகள் அதிகரித்து வருவதால், அதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு செய்திகுறிப்பில், நடப்பு நிதியாண்டுக்கான இறுதி மாதம் மார்ச் என்பதால் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண பதிவு அதிகமாக இருக்கும் மற்றும் கடன்பெற்று வீடு மனை வாங்குபவர்கள், தொழிலதிபர்கள் இந்த மாதத்திற்குள் பத்திரப்பதிவை முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பார்கள். இதனால் ஒருசில சார்பதிவாளர் அலுவலகங்களில் அனைத்து வேலை நாட்களிலும் ஆவணப் பதிவிற்கான டோக்கன் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அதிகரிக்கும் ஆணவ பதிவுகளுக்கு ஏதுவாக சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சனிக்கிழமை நாட்களில் நடைபெறும் ஆவண பதிவுகளுக்கு தமிழ்நாடு பதிவு சட்ட விதி 4-ல் கண்ட “சிறப்பு அவசரநிலை” அடிப்படையில் ஆவணப் பதிவிற்கான கட்டணமான ரூ.200 மட்டும் கூடுதலாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களின் ஆவணப்பதிவை உரிய நேரத்தில் முடித்துக் கொள்ளுமாறு மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. பி.மூர்த்தி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேபோன்று ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெறும் வகையில் நியாய விலை கடை செயல்படும் நேரம் மாலை 6 மணியாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |