Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

” நகராட்சி மற்றும் பேரூராட்சி ” தலைவர் போட்டி…. வேட்பாளர்களின் பெயர் பட்டியல்…!!

தி.மு.க சார்பில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கான போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இதற்காக தி.மு.க சார்பில் போட்டியிடும்  வேட்பாளர்களின் பெயர் பட்டியல்  வெளியிடபட்டுள்ளது. இந்த அறிவிப்பை தி.முக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

இதில் மேல்பட்டாம் பகுதியில்  ஜெயமூர்த்தி என்பவரும், தொரப்பாடி பகுதியில் வனஜா, சேத்தியாதோப்பு பகுதியில் குலோத்துங்கன், கிள்ளை பகுதியில் மல்லிகா செல்லப்பா, ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் செல்வி தங்க ஆனந்தன்கங்கைகொண்டான் பகுதியில் பரிதா அப்பாஸ், புவனகிரி பகுதியில் கந்தன், குறிஞ்சிப்பாடி பகுதியில் கோகிலா குமார், பரங்கிப்பேட்டை பகுதியில் தேன்மொழி சங்கர், காட்டுமன்னார் கோவில் பகுதியில் கணேசமூர்த்தி, அண்ணாமலை நகர் பகுதியில் பழனி என்பவரும் போட்டியிடவுள்ளனர்.

Categories

Tech |