Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பணியின் போது விபத்து…. பரிதாபமாக போன உயிர்… உடலை வாங்க மறுத்த உறவினர்கள்…!!

ஆவின் பால் நிறுவனத்தில் வேலை செய்யும்போது தீக்காயம் ஏற்பட்டு இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டுவில் ஆவின் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த  நிறுவனத்தில் கடந்த  மாதம்  23ஆம் தேதி  இரவு குளிரூட்டி பதப்படுத்தப்பட்டு  பாக்கெட்டுகளில் அடைக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது.  அப்போது  எதிர்பாராதவிதமாக  பால்  குளிரூட்டும்  பாய்லர் திடீரென  அதிக அழுத்தத்தின் காரணமாக  வெடித்து சிதறியுள்ளது.

அப்போது ஒப்பந்தம் அடிப்படையில் பணியிலிருந்த துறையூரை சேர்ந்த 31 வயதான ரித்தீஷ் என்பவரின் மீது தீ காயம் ஏற்பட்டுள்ளது . இதனால்  தீக்காயத்துடன் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரித்தீஷ்க்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

இச்சம்பவம் குறித்து கே .கே.நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டது.இந்நிலையில்   உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .அதன் பின்னர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்பு உறவினர்கள் உடலை வாங்கிச் சென்றுள்ளனர் ..

மேலும்  திருவண்ணாமலையை சேர்ந்த ஒப்பந்ததாரர்  வீரமணி மீது கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் .

Categories

Tech |