செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம் நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜெயக்குமார் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.