Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய ஜீப்…. பெண்களுக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

ஜீப் டயர் வெடித்து மரத்தில் பயங்கரமாக மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் கொசுவலை தயாரிக்கும் ஆலையில் நாமக்கல் மாவட்டம் எருமைபட்டி பகுதியிலிருந்து ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று எருமைபட்டியை சேர்ந்த 7 பெண்களை ஏற்றிக்கொண்டு ஜீப் ஒன்று அதிகாலையில் கரூர் நோக்கி சென்றுள்ளது. அப்போது அரூர் அருகே சென்று கொண்டிருந்தபோது ஜீப்பின் டயர் திடீரென வெடித்ததில் ஜீப்  கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம்இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் எருமைபட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி (50) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். மேலும் ஜீப் டிரைவர் உள்பட 7 பேர் பலத்தகாயமடைந்த நிலையில் அப்பகுதி வழியாக சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மோகனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |