Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பள்ளிக்கு சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை அடுத்துள்ள ஆண்டிச்சிகுளம் பகுதியில் வசித்து வரும் 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால் இதுகுறித்து மாணவியின் தந்தை சிக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது அவரது உறவினர் மருதுபாண்டி(30) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |