மச்சானை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவராஜபுரம் கிராமத்தில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டனை அவரது தங்கச்சியின் கணவரான ஆனந்தசெல்வம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தசெல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் ஆனந்தசெல்வத்தை தீவிரமாக தேடி வருகின்றன