Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒருமையில் பேசிய போலீஸ்…. கொந்தளித்த வக்கீல்கள்…. நீதிமன்றம் புறக்கணிப்பு….!!

வக்கீலை ஒருமையில் பேசிய போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து வக்கீல்கள் நீதிமன்றத்தை புறக்கணித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். வக்கீலான இவர் பா.ஜ.க.வில் மாவட்ட பிரச்சார குழு துணை தலைவராகவும் இருந்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று வக்கீல் குமார் தனது கட்சிக்காரர் ஒருவரின் புகார் மனு தொடர்பாக ராசிபுரம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் வக்கீல் என்றும் பாராமல் குமாரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ராசிபுரத்தில் செயல்படும் சார்பு நீதிமன்றம், நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகிய 3 நீதிமன்றங்களையும் வக்கீல்கள் புறக்கணித்துள்ளனர். இதனால் நீதிமன்றங்களில் அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டது.

Categories

Tech |