அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரேனியர்கள் என்று அழைப்பதற்கு பதிலாக ஈரானியர்கள் என்று உச்சரித்துள்ளது, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரஷ்யாவின் தாக்குதலானது உக்ரைன் மீது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் உக்ரைனுக்கு ஆதரவாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு திரட்டும் கூட்டத்தில் பேசியுள்ளபோது, உக்ரேனியர்கள் என்று அழைப்பதற்கு பதிலாக ஈரானியர்கள் என்று தவறுதலாக உச்சரித்து உள்ளார். இதனைத்தொடர்ந்து அவரது இந்த பேச்சால், அவரை பலர் கேலி செய்து வருகின்றனர்.
மேலும் அவரின் புத்திக்கூர்மையை குறித்து நகையாடி வருகின்றனர். அக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பேசியுள்ளதாவது, “புதின் கீவ் நகரை சுற்றி ராணுவ டேங்குகளில் வலம் வரலாம். ஆனால், அவர் ஒருபோதும் ஈரானிய மக்களின் இதயங்களையும் ஆன்மாக்களையும் பெறமாட்டார்”. அவர் கூறிய அந்த வார்த்தையானது தற்போது ட்விட்டரில் டிரெண்டாகி, பரவி வருகிறது. மேலும் இது தொடர்பாக புதிய கருத்து கணிப்பு ஒன்றை ஏபிசி நியூஸ் மற்றும் தி வாஷிங்டன் போஸ்ட்டின் வெளியிட்டுள்ளது. அதில் அவருக்கு ஜனாதிபதியாக திறம்பட பணியாற்ற தேவையான மன கூர்மை இருப்பதாக நம்பவில்லை என 54 சதவீத அமெரிக்கர்கள் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.