பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் கிராமத்தில் மாரியம்மாள் வசித்து வந்துள்ளார். இவரது முத்த மகனான மகாராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாரியம்மாள் நேற்று விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மாரியம்மாலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து மாரியம்மாளின் 2-வது மகன் பேச்சிமுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.