மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபால்சாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோபால்சாமி வேலை முடிந்து திருப்பூரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சித்தம்பலம் பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கோபால்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபால்சாமியின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.