Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பிக்பாக்ஸ் பிரபலம்… ஆள் அடையாளமே தெரியலையே… புகைப்படம் வைரல்…!!!

பிக்பாக்ஸ் ஆரவ் வெளியிட்ட புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த பிக்பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வென்றவர் ஆரவ். இவர் பிக் பாக்ஸ் மூலம் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் க்கு பிறகு இவர் ஹோலிவுட்டில் நடிகராகிவிட்டார். இவர் சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரைபடத்தில் ஹீரோவாக நடித்தார். பிறகு ராஜபீமா படத்தில் நடித்தார். அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார் ஆரவ். இடையில் இவருக்குத் திருமணமும் நடந்தது. ஆரவ் ஜிம்முக்கு சென்று தன் உடம்பை மெயின்டெய்ன் செய்து வருகின்றார்.

இந்நிலையில் தனது ஜிம் பாடி புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்திருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது நான் மாற வேண்டும் என்று நினைத்தேன் இடையில் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது நான் வலிமையாக வர விரும்பினேன். உடலளவிலும் மனதளவிலும் வலிமையாக மாற விரும்பினேன். ஆறுமாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் இந்த புகைப்படம் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

Categories

Tech |