Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளை மாணவர்களுக்கு கட்டாயம் நடத்த வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கு கூட்டாக உடற்பயிற்சி அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாணவரையும் ஏதாவது ஒரு விளையாட்டில் பங்கேற்குமாறு அறிவுறுத்தி பயிற்சி அளித்து ஊக்கப்படுத்த வேண்டும். விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சிக்கான பாட குறிப்புகளை மாணவர்களுக்கு வழங்கி, உடற் திறனாய்வு தேர்வு நடத்தியதற்கான பதிவேடு, அவர்களை விளையாட வைத்ததற்கான பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |