இந்தியாவில் குழந்தைகளுக்கான ஆதார் கார்டு பெறுவது எப்படி என்பது குறித்த தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
ஆதார் கார்டு என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. மேலும் வருமானவரி தாக்கல் செய்வதிலிருந்து அரசின் திட்டங்கள் கீழ் பயன்பெறுவது வரை மிகவும் அவசியத் தேவையாக உள்ளது. அந்த வகையில் ஆதார் கார்டுகள் UIDAl என்ற ஆதார் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்படுவது போல் குழந்தைகளுக்கும் தனியாக பால் ஆதார் கார்டு என்ற வகை ஆதார் வழங்கப்படுகிறது.
இதனால் புதிதாக பிறந்த குழந்தை முதல் சிறுவர் வரையிலுள்ள அனைவருக்கும் பால் ஆதார் கார்டு பெறலாம். ஏனெனில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் பொழுது இந்த பால் ஆதார் கார்ட் அவசியமானது. அதனால் உங்கள் குழந்தைக்கு பால் ஆதார் கார்டு பெற வேண்டுமானால், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- பால் ஆதார் கார்டு பெற குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட டிஸ்சார்ஜ் ஸ்லிப் (Discharge Slip) வேண்டும்.
- பெற்றோரில் ஒருவரின் ஆதார் கார்டு வேண்டும்.
- ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெற வேண்டுமெனில் ஆதார் சேவை மையத்துக்கு சம்பந்தப்பட்ட குழந்தையையும் பெற்றோர் அழைத்துச்செல்ல வேண்டும்.
- பால் ஆதார் கார்டு பெறுவதற்கு அருகில் உள்ள ஆதார் சேர்க்கை மையத்துக்கு செல்லவும்.
- ஆதார் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் கார்டுடன் சமர்ப்பிக்கவும்.
- பெற்றோரின் மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்களும் வழங்கப்பட வேண்டும்.