Categories
மாநில செய்திகள்

மக்களே எச்சரிக்கை…. தமிழகத்திற்கு தலைவலி தரும் நார்த் இண்டியன்ஸ்….ஆன்லைனில் பண மோசடி….!!!

இணையத்தில் பண மோசடி செய்யும் கும்பலை நெல்லை மாநகர காவல்துறை சிறப்பு தனிப்படை அமைத்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆன்லைனில் பலர் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் பலர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே நெல்லை மாநகர காவல்துறை வடமாநில ஆன்லைன் மோசடி கும்பலை பிடிக்க சிறப்பு தனிப்படை ஒன்றை அமைத்துள்ளதாக, நெல்லை மாநகர காவல் ஆணையர் துரை குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நெல்லை மாநகர பகுதிகளில் பலரின் கைபேசிகள் காணாமல் போனதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணையில் ஈடுபட்டு அதன்பின் கைப்பற்றிய செல்போன்களை அவர்களுக்கு உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்நிகழ்வானது நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்வில் நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் துரை குமார், கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை அவர்களின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இதனைத்தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் 33 லட்சத்து 55 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 233 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டு, அதற்குரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் இணையத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், பரிசு விழுந்ததாகவும் கூறிய மோசடி நபர்கள் ஓடிபி, ஏடிஎம், கேஒய்சி ஆகியவற்றின் மூலம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி 26 லட்சத்து 73 ஆயிரத்து 450 ரூபாய் பறிமுதல் செய்து, அதற்குரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் இணையதளத்தில் பண மோசடி தொடர்பாக 23 புகார்கள் பெறப்பட்டு, மோசடியில் ஈடுபட்ட அந்த நபர்களின் கணக்குகளை முடக்கி வைத்துள்ளதாகவும் சைபர்கிரைம் போலீசார் தனி குழு அமைத்து இந்த மோசடி கும்பலை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து இந்த பண மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்தவர்கள் வடமாநிலத்தவர்கள் என்றும் ஆனால் அவர்கள் வங்கிகளில் போலியான ஆவணங்களைக் கொடுத்துள்ளதால், அவர்களை கைது செய்வது என்பது சவாலாக உள்ளதாகவும் தெரிவித்தார். இருந்தாலும் தனிப்படை மூலம் விரைவில் வடமாநிலம் உள்ள காவல் நிலையங்களில் இருக்கும் தகவல்கள் திரட்டப்பட்டு கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |