Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுகள்…. இன்று முதல் தொடங்குகிறது….!!!!

சென்னையில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வுகள் தொடங்குகின்றன. குருப்-1 பணிகளுக்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2020 ஜனவரி 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான முதன்மை தேர்வு சென்னை மையத்தில் மட்டும் மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில்
நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. காவல் துறை துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட பதவிகளில் 66 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது.

உயர்நீதிமன்ற வழக்கு, கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக முதன்மைத் தேர்வு நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வுசெய்யப்பட்ட நிலையில் இன்று தேர்வு தொடங்குகிறது. இந்தத் தேர்வு இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |