சென்னை மேயராக தேர்வான பிரியாவுக்கு அமைச்சர் சேகர் பாபுவும், மா.சுப்பிரமணியனும் செங்கோல் வழங்கினர். நேற்று திமுக சார்பில் சார்பில் மேயர் வேட்பாளராக பிரியா ராஜன் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
சென்னையில் மூன்றாவது பெண் மேயராக பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வட சென்னையை சேர்ந்த ஒருவர் மேயராவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.