தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது.
இதையடுத்து நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி தேர்தலில் அதிமுகவினர்-திமுகவினர் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பு மோதலை தடுப்பதற்கு காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது மறைமுக தேர்தல் முடியவுள்ள நிலையில் திமுகவினர் கல்வீச்சு தாக்குதல் நடத்தி உள்ளனர். அதிமுகவினர் பெரும்பான்மையுடன் உள்ள நிலையில் தேர்தலை நடத்த விடாமல் திமுகவினர் தடுத்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி நகராட்சியிலும் கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளது.