12-வது மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இன்று முதல் தொடங்குகிறது.இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.இந்திய நேரப்படி இப்போட்டி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டரான 24 வயதான ஆஷ்லி கார்ட்னெர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளதால் ஆஸ்திரேலிய அணியின் முதல் 2 லீக் போட்டிகளில் அவர் விளையாட முடியாது.