கொரோனா பரவலின் தாக்குதல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தனியார் பள்ளிகளானது அரசு அனுமதித்துள்ள கல்வி கட்டணத்தை மீறி வசூலித்தால், அப்பள்ளியின் மீது பெற்றோர்கள் புகார் அளிக்கலாம் என கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.