நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கும், மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் இன்று (மார்ச்.4) மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. மறைமுக தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் வாக்களிக்கின்றனர். திமுக கூட்டணியே 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மை பெற்றுள்ளதால், பெரும்பாலான பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் காங்கேயம் மாநகராட்சி தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் திமுகவின் சூர்யபிரகாஷ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஹேமலதாவுக்கு யாரும் முன்மொழியாததால் திமுக சார்பில் சூர்யபிரகாஷ் தலைவராக உள்ளார். காங்கேயம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் காங்கிரஸ் 1 இடத்தில் மட்டுமே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.